அந்த வீரரை தான் நேரா போய் பார்த்தார் - தோனியை கூட சந்திக்கல காவ்யா மாறன்!

Sunrisers Hyderabad Cricket IPL 2024
By Sumathi May 17, 2024 11:32 AM GMT
Report

காவ்யா மாறனின் செயல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவ்யா மாறன் 

ஐதராபாத் - குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் அளிக்கப்பட்டது.

kavya maran

இதன்மூலம், ஐதராபாத் அணி 15 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் இருந்து வந்தது.

விஜய், அஜித்தை எல்லாம் மிஞ்சிய காவ்யா மாறன்; சொத்து மதிப்பு தெரியுமா? ஷாக் ஆகிடுவீங்க!

விஜய், அஜித்தை எல்லாம் மிஞ்சிய காவ்யா மாறன்; சொத்து மதிப்பு தெரியுமா? ஷாக் ஆகிடுவீங்க!

நெகிழ்ச்சி சம்பவம் 

இதனால் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் மிகுந்த சந்தோஷத்தில் காணப்பட்டார். வழக்கமாக காவ்யா மாறன் எந்த அணிகளின் வீரர்களையும் மைதானத்தில் சந்திக்க மாட்டார். ஐதராபாத் அணியின் ஓய்வறைக்கு கூட செல்லும் பழக்கம் கிடையாது.

அந்த வீரரை தான் நேரா போய் பார்த்தார் - தோனியை கூட சந்திக்கல காவ்யா மாறன்! | Kavya Maran Meets Kane Williamson Viral Video

தோனி, விராட் கோலி போன்ற வீரர்களுடன் விளையாடினாலும் யாரையும் சந்திக்க மாட்டார். இந்நிலையில், ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டனான கேன் வில்லியம்சனை சந்தித்து நட்பு பாராட்டி நலம் விசாரித்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.