இனி யாராலும் இந்திய அணியை தொட முடியாது; இதுதான் டெம்ப்ளேட் - சூர்யகுமார் உறுதி!

Sumathi
in கிரிக்கெட்Report this article
இந்திய அணி விளையாடபோகும் டெம்ப்ளேட் குறித்து சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார்.
IND vs SL
இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கேப்டன்சியை சிறப்பாக தொடங்கியுள்ளதாக ரசிகர்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசியுள்ள கேப்டன் சூர்யகுமார்,
சூர்யகுமார் பேட்டி
இந்த டி20 தொடர் தொடங்குவதற்கு முன்பாக பேசியது தான். என்ன மாதிரியான ஆட்டத்தை டி20 கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது தான் எங்களின் பேசுபொருளாக இருந்தது. இதே டெம்ப்ளேட்டில் தான் அடுத்தடுத்த போட்டிகளிலும் விளையாட விரும்புகிறோம். வானிலையை கருத்தில் கொண்டு பவுலிங்கின் போது 160 ரன்களுக்கு கீழ் இலங்கை அணியை கட்டுப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று கருதினோம்.
அதேபோல் மழையும் எங்களுக்கு உதவியாக அமைந்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். வரும் போட்டிகளில் மீதமுள்ள வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதை இனி தான் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்.
இந்த வெற்றிக்காக மகிழ்ச்சியடைகிறோம். ஏனென்றால் ஆட்டம் கைகளை விட்டு செல்லும் போது மீண்டு எழுந்து வென்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.