இனி யாரும் தப்பிக்கமுடியாது.. ஆப் மூலம் ஆப்பு - ரோட்டுல இப்படி மட்டும் போனால் ரூ.10,000 அபராதம்!
தமிழக அரசு சாலை விதிகளை ஸ்ட்ரிக்ட் செய்து வருகிறது.
சாலை விதிகள்
இந்தியாவில் சாலை விபத்துகள் குறித்து வெளியான ரிபோர்டில் தமிழ்நாடு தான் விபத்துகளில் முதலிடத்தில் உள்ளது. இதனை தடுக்கும் நோக்கில், மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதற்கு ராஜ்மார்க்யாத்ரா என்ற புதிய மொபைல் ஃபோன் செயலியை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இந்த செயலி, பயணிகளுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் குறித்த விரிவான தகவல்களை வழங்குவதுடன், புகார் தீர்க்கும் முறையையும் வழங்கும். அதில் வாகனங்கள் ஏதாவது நெடுஞ்சாலையில், வேகமாக பயணித்தால், ஜிபிஎஸ் வாயிலாக கண்காணிக்கப்பட்டு, டிரைவர்களுக்கு உடனே அலாரம் சிக்னல்கள் அனுப்பப்படும்.
தமிழக அரசு
இந்நிலையில், தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஆய்வுக் கூட்டத்தில் பேசிய தமிழக அமைச்சர் எ.வ வேலு, சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை, நெடுஞ்சாலை துறைக்கு தெரிவிக்க, மொபைல் ஆப் விரைவில் அறிமுகம் செய்யப்போவதாக கூறியிருந்தார்.
மேலும், சாலைகளில் செல்லும்போது அளவுக்கு அதிகமாக சத்தத்தை தரும், "மின்னணு ஹாரன்"களால் ஒலி மாசு அதிகமாகிறது. இதனால், சாலைகளில் செல்வோர்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள்.
பொதுவாக ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் இந்த சத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். வாகனங்களில் உள்ள ஹாரன்கள், 80 டெசிபல் அளவில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அரசு கட்டுப்பாட்டு வாரிய சட்ட விதியாகும். ஆனால் பலர் 100 டெசிபல் அளவிற்கு வைத்துள்ளனர்.
அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் உள்ள அரசு, தனியார், ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க, வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு, போக்குவரத்து ஆணையரகம் அதிரடியாக உத்தரவு போட்டுள்ளது. மேலும், அதிக டெசிபல் உள்ள ஹாரன்கள் அங்கேயே அகற்றப்படும். அத்துடன், அந்த பஸ்களின் ஓனர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.