காவிரி நீர்: கர்நாடகா பிடிவாதம் பிடிக்கிறது.. ஜனநாயகத்திற்கு நல்லதல்ல - துரைமுருகன் காட்டம்!

Tamil nadu DMK Durai Murugan Karnataka
By Vinothini Oct 31, 2023 02:45 PM GMT
Report

காவிரி பிரச்சனை குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.

அமைச்சர் பேட்டி

சென்னை, கோட்டூர்புரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், "தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் கொடுப்பதில், கர்நாடகாவில் இதுவரையில் இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண்டு பிடித்ததில்லை. கர்நாடக அரசு இவ்வளவு பிடிவாதமாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

Minister Duraimurugan

ஏதோ ஒரு எதிரி நாட்டுடன் மோதுவது போல நினைக்கின்றனர். அல்லது தமிழகம் ஏதோ அவர்களிடம் சலுகை கேட்பது போல கருகின்றனர். தமிழகதிற்க்கு வழங்க வேண்டிய 140 டி.எம்.சியில், பதில் வெறும் 56.4 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை ஒரு மாநில அரசு மதிக்காமல் நடப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல".

கலவரமான கலெக்டர் ஆபீஸ்.. அடிதடியில் ஈடுபட்ட அமைச்சரின் அசிஸ்டன்ட் - ஆட்சியர் அதிரடி!

கலவரமான கலெக்டர் ஆபீஸ்.. அடிதடியில் ஈடுபட்ட அமைச்சரின் அசிஸ்டன்ட் - ஆட்சியர் அதிரடி!

காவிரி மேலாண்மை

இதனை தொடர்ந்துன், "காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாக செயல்படுகிறது. ஜூன் முதல் இதுவரை கர்நாடகா 54 டிஎம்சி மட்டுமே தந்துள்ளது. 83.6 டிஎம்சி பற்றாக்குறை உள்ளது. ஒழுங்காற்று குழுவிடம் 13,000 கன அடி கேட்டோம். அவர்கள் 2,600 கன அடி பரிந்துரைத்துள்ளார்கள்.

Minister Duraimurugan

ஆளுநரின் அரசியல் விளையாட்டை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது சரியல்ல. காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக அரசு எதிரி போல் நடந்து கொள்வதாகவும்,

வரும் 3-ஆம் தேதி கூட உள்ள காவிரி மேலாண்மை குழு கூட்டத்தில் 16 ஆயிரம் கன அடி தண்ணீர் தர வலியுறுத்தப்படுமென்றும், இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளது" என்று கூறியுள்ளார்.