காவேரியின் வரலாறு தெரியாமல் பேசுகிறார் அமைச்சர் - துரைமுருகன் விளாசல்

M K Stalin Tamil nadu DMK Durai Murugan
By Karthick Aug 07, 2023 04:56 AM GMT
Report

காவிரி விவகாரத்தில் இந்த விவரமெல்லாம் தெரியாமல் ஒன்றிய இணை அமைச்சர் தளபதிக்கு அறிவுரை சொல்வது போல் ஓர் அறிக்கை விட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது என அமைச்சர் துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார். 

மத்திய அமைச்சர் கேள்வி  

duraimurugan-slams-union-minister

கூட்டணியில் இருக்கும் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியும், தமிழ்நாட்டில் திமுகயும் ஆட்சி தான் நடைபெறுகிறது. ஓரணியில் இருப்பவர்கள், காவிரி பிரச்னையை ஏன் நேரில் பேசி தீர்த்துக் கொள்ளக் கூடாது?” என மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருந்தார்.

துரைமுருகன் பதிலடி  

இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மத்திய இணை அமைச்சருக்கு காவிரி பிரச்சனை குறித்து தெரியுமா? என கேள்வி எழுப்பி உள்ளார். காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் காவிரி மேலாண்மை வாரியத்தில் உள்ளது. 

duraimurugan-slams-union-minister 

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் ஒன்றும் எழுதியுள்ளார். இந்த கடிதத்திற்கு பிரதமரோ உள்துறை அமைச்சரோ இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்.

duraimurugan-slams-union-minister

காவிரி நதிநீர் மத்திய அரசின் கீழ் உள்ள காவிரி மேலாண்மை வாரியத்தில் உள்ளது. இந்த வாரியம் சரிவர செயல்படவில்லை.