விரைவில் டாஸ்மாக் கடைகளில் 100% வீட் பீர் - விலை எவ்வளவு தெரியுமா?
முழுக்க கோதுமையில் தயாரிக்கப்பட்ட பீர் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கோதுமை பீர்
தமிழகத்தின் கோடை வெயிலினால் பீர் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் தினமும், 60,000 பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை தற்போது, 1 லட்சம் பெட்டிகளை தாண்டியுள்ளது.
தற்போது வரை 35 பீர் வகைகள் விற்கப்படுகின்றன. இந்நிலையில், 100 சதவீதம் கோதுமையில் தயாரிக்கப்பட்ட, '100% வீட் பீர்' என்ற பெயரில் புதிய பீர் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
மேலும், பிரபல பிராண்ட் ஆன 'காப்டர்' தயாரிப்பில், 'செலக்ட் சூப்பர் ஸ்ட்ராங், செலக்ட் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்மூத் லெஹர் பீர்' வகைகளை விற்பதற்கும் டாஸ்மாக் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
விரைவில்...
'வீட்' பீர் விலை, 190 ரூபாய் மற்றும் காப்டர் வகை பீர்கள், 160 ரூபாய் - 170 ரூபாய் விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசிய மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அதிகாரி, புதிதாக, 'டிராபிக்கல்' நிறுவனத்திடம் இருந்து பீர் வாங்கப்படுகிறது.
இந்நிறுவனத்தின் ஆலையில், மற்றொரு நிறுவனமும் பீர் உற்பத்தி செய்கிறது. எனவே, இந்தாண்டில் தட்டுப்பாடு இல்லாமல் கடைகளுக்கு, அனைத்து வகை பீர்களும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
கையிருப்பில், 10 லட்சம் பெட்டி பீர் வகைகள் உள்ளன.
புதிய வகை பீர்கள் விரைவில் கடைகளில் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.