டாஸ்மாக் கடைகளில் அறிமுகமான புதிய வகை பீர் - மால்ட்டில் தயாரானதாம்.!
தமிழகத்தில் பீர் தயாரிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு வருகிறது.
பார்லி பீர்
மது பிரியர்களுக்கு பொதுவாக பீர் என்றாலே ஆர்வம் அதிகம். அந்த வகையில், தற்போது தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் பீர் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
முதல்முறையாக தமிழ்நாட்டில் மட்டும் விற்பனைக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது 100 சதவீதம் பார்லி என்னும் மால்டினால் உருவாக்கப்பட்டது. 650 மிலி கொண்ட இதன் முழு பாட்டில் விலை ரூ.200ஆகவும்,
புதிதாக அறிமுகம்
அரை பாட்டில் மால்ட் பீரின் விலை ரூ.100ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை பிரிட்டிஷ் எம்பயர் என்னும் நிறுவனம் டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
சில நாட்களில் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் என்றும், நல்ல வரவேற்பை பெறும் எனவும் டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.