மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 - இனி இவர்களுக்கும் வாய்ப்பு?
மகளிர் உரிமைத்தொகை குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது சுமார் 1 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பெற்று வருகிறார்கள். இந்த திட்டத்தின்படி, குடும்பதலைவிகளுக்கு உரிமைத்தொகை கொடுக்க, ரூ.11,650 கோடி தேவைப்படுகிறது.
முக்கிய தகவல்
இதற்கிடையில், மகளிர் உரிமைத்தொகையை ரேஷன் கார்டு உள்ள அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் வழங்கவேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த மகளிர் உரிமைத்தொகையை பெறுவதற்கான திட்டத்தில் முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள்,
முன்னாள் மாநகராட்சி ஊழியர்களின் மனைவிகள், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், புதிதாக திருமணமானவர்கள் ஆகியோரை சேர்ப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் உரிமைத்தொகை பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.
அதன்மூலம், மேலும் 2 லட்சத்து 30 ஆயிரம் பெண்கள் மகளிர் உரிமைத்தொகையை பெறுவார்கள். அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டும், திமுகவின் பவள விழாவை முன்னிட்டும் இந்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.