இந்த மாதம் இன்னும் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வரலையா? இதுதான் காரணம் - முக்கிய தகவல்!

Tamil nadu
By Sumathi Oct 16, 2023 03:47 AM GMT
Report

மகளிர் உரிமைத்தொகை குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

உரிமைத்தொகை

மகளிர் உரிமை தொகை திட்டத்தை கடந்த 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 1.6 கோடி மகளிர் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த மாதம் இன்னும் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வரலையா? இதுதான் காரணம் - முக்கிய தகவல்! | Magalir Urimai Thogai 1000 And 2Nd Installment

சுமார் 45 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, வரும் 18ம்தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் மேல்முறையீட்டு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலையா, மிஸ் பண்ணிட்டீங்களா? உதயநிதி கூறிய அப்டேட்!

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலையா, மிஸ் பண்ணிட்டீங்களா? உதயநிதி கூறிய அப்டேட்!

எப்போது கிடைக்கும்?

ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனக் கூறியிருந்த நிலையில், இரண்டாவது சனிக்கிழமை வங்கிகள் விடுமுறை தினம் என்பதால்,

இந்த மாதம் இன்னும் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வரலையா? இதுதான் காரணம் - முக்கிய தகவல்! | Magalir Urimai Thogai 1000 And 2Nd Installment

இன்று (அக்டோபர் 16) வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்திற்காக இந்த மாதமும் 1065 கோடியே 21 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுவது குறிப்பிடத்தக்கது.