மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலையா, மிஸ் பண்ணிட்டீங்களா? உதயநிதி கூறிய அப்டேட்!
மகளிர் உரிமைத் தொகை குறித்த அப்டேட் தகவலை அமைச்சர் உதயநிதி கொடுத்துள்ளார்.
உரிமைத் தொகை
மகளிர் உரிமை தொகை திட்டத்தை கடந்த 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 1.6 கோடி மகளிர் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை அதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.
புது அப்டேட்
தொடர்ந்து, மகளிர் உரிமைத் திட்டத்தின் மீதான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக அக்கறையுடன் கவன ஈர்ப்பை கொண்டு வந்துள்ளனர். 1.62 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
முழுக்க முழுக்க தகுதி வாய்ந்த 1.06 கோடி மகளிர் தேர்வு செய்யப்பட்டனர். பயனாளிகளாக தகுதியானவர்கள் இ-சேவை மையங்கள் மூலம் மேல்முறையீடு செய்யலாம். நவம்பர் 30 ஆம் தேதிக்குள் உரிய தீர்வு கிடைக்கும். குடும்ப அட்டை வைத்துள்ள 64 லட்சம் பேர் தாங்களாகவே புரிந்துகொண்டு விண்ணப்பம் அளிக்கவில்லை.
அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக்கொள்கிறேன். மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்காத பயனாளிகள் புதிதாக விண்ணப்பிக்க அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.