காத்திருப்பு முடிந்தது...மகளிர் உரிமைத்தொகைக்கு தேடி வரும் வாய்ப்பு - முக்கிய அறிவிப்பு!
மகளிர் உரிமைத்தொகை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து. வாக்குப்பதிவுகள் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்தது. அதன் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. முன்னதாக இந்த தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த மார்ச் 16ஆம் தேதி வெளியிட்டது.
அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. அதன்படி, ஒருவர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.விதிமுறைகள் மீறப்படுகிறதா என்று கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வருமான வரித்துறையினரின் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு
தொடர் சோதனை நடைபெற்று வந்தது. இதனிடையே தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் வரும் 6ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றார். தற்போது இந்த பரபரப்பான தேர்தல் களம் ஒய்வடைந்த நிலையில், இன்றுடன் தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்படுகின்றன.
முக்கிய அறிவிப்பு
இனி பணம், பொருட்கள் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் இருக்காது. 2 மாதம் இந்த விதிமுறையால் பல்வேறு பணிகள் தடைபட்டிருந்தன. இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாக உள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள்,
நிராகரிக்கப்பட்டவர்கள் என பலர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க தயாராக உள்ளனர். அது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடாமல் இருந்து வருகிறது. எனினும் அடுத்த ஒரு சில நாட்களில் விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்ன எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே ஆவணங்களை சமர்ப்பித்து திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும், அதன் பின்னர் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். எனவே ஜூலை மாத மகளிர் உரிமைத் தொகைக்கான பணம் புதிதாக இணைய உள்ளவர்களுக்கும் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களும் பல மாதங்களாக அட்டைகள் கிடைக்கப்பெறாமல் இருந்தவர்களுக்கு விரைவில் புதிய ரேஷன் அட்டைகளும் வழங்கப்பட உள்ளன.