சந்திரபாபு நாயுடுவுடன் மு.க ஸ்டாலின் திடீர் சந்திப்பு- என்ன நடந்தது?
ஸ்டாலின் மற்றும் சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளனர்.
திடீர் சந்திப்பு
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து. வாக்குப்பதிவுகள் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்தது. அதன் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்திய கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் எந்த கட்சிக்கும் தனிப்பெருன்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த பரபரபரப்பான சூழலில், ஆந்திராவில் முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.கவுடனான கூட்டணியை உறுதி செய்தார். அதே வேளையில் இன்று பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
ஆட்சியை பிடித்தால் தாய்மார்களுக்கு ரூ.15000 வழங்கப்படும் - சந்திரபாபு நாயுடுவின் தேர்தல் வாக்குறுதி!
என்ன நடந்தது?
இந்த கூட்டத்தில், நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும், பா.ஜ.கவிடம் பல நிபந்தனை விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அதே நேரத்தில், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினும் கலந்துகொண்டார்.
இந்த நிலையில், டெல்லி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். மேலும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றிப் பெற்றதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திரபாபு நாயுடுவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது வலைத்தள பக்கத்தில், டெல்லி விமான நிலையத்தில் கலைஞரின் நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடுவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, சகோதர மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையேயான உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தேன்.
அவர் மத்திய அரசில் முக்கியப் பங்காற்றுவார், தென் மாநிலங்களுக்காக வாதிடுவார், நமது உரிமைகளைப் பாதுகாப்பார் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.