ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் மது - மகிழ்ச்சியில் மதுபிரியர்கள்!
ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் மது கிடைக்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தலும் மே 13 ஆம் தேதி நடைபெறுகிறது.
இங்கு ஆட்சியை தக்கவைக்க ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டியும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தீவிர தேர்தல் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
பாஜகவுடன் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணும் களம் காண்கின்றனர். குப்பம் தொகுதியில் போட்டியிடும் சந்திரபாபு நாயுடு தனது பரப்புரையின் போது,
மது விலை குறைப்பு
தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால், தரமான மதுவை குறைந்த விலைக்கு வழங்கப்படும். ஜெகன் மோகன் ஆட்சியில், மது உள்பட அனைத்து விதமான பொருட்களின் விலையும் அதிகரித்துவிட்டது.
50 மில்லி லிட்டர் மதுவின் விலை 60 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக அதிகரித்தள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
மே 13ல் பதிவாகும் வாக்குகள், ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.