தமிழ்நாடு மைனஸ் பாயின்ட்டில் இருக்கு - அண்ணாமலை சொன்ன பகீர் தகவல்!
தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு
ஈரோடு மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கான தொழில் முனைவோர் கூட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார் .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,தமிழ்நாடு தொழில் வளர்ச்சி பின்தங்கி உள்ளது. இதற்கு ஜிஎஸ்டி குறியீடு வைத்து எந்த மாநிலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பதை பொறுத்து கணிக்க முடியும்.
ஜிஎஸ்டி
ஆனால் தமிழ்நாடு ஜிஎஸ்டி மாநில வருவாய் மைனஸ் பாயின்ட் அடிப்படையில் இருந்து கீழே சென்று உள்ளது. இது தமிழகத்தின் பொருளாதாரம் சீர்குலைவை நோக்கிச் சென்று உள்ளது.
இந்த சூழலில் தமிழக அரசு தொழில்முனைவோருக்கு போதுமான வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். தமிழகத்தில் இருந்து தொழில்முனைவோர் வேறு மாநிலத்துக்குச் செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.