உருவாகும் அண்ணாமலை Biopic!! ஹீரோவாக கமிட்டான தளபதி ??
அண்ணாமலை
தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசியலின் முக்கிய தலைவராக உருவெடுத்துள்ளார்.
தமிழக வரும் பாஜக தலைவர்கள் அவரை புகழ்வது கட்சி விசுவாசம் என்றால், ஒரு கட்சியின் கொடியை பறக்கவிட்டு வாகனங்களும், தெரு முனை சுவர்களில் கட்சியின் சின்னம் இருப்பதே பெரும் வளர்ச்சி என நிதர்சனமான உண்மை என்பதை வைத்து பார்க்கும் போது, அண்ணாமலை வருகைக்கு பின் பாஜக தமிழகத்தில் மெல்ல கால் ஊன்ற துவங்கியுள்ளது.
நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் திராவிட கட்சிகள் அல்லாத கூட்டணியை அமைத்துள்ள பாஜக, கோவையில் கட்சியின் மாநில தலைவரான அண்ணாமலையையும் களமிறங்கியுள்ளது. இதுவே கோவை தொகுதி மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 4-ஆம் தேதி அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு தேர்தல் முடிவு வெளிவரவுள்ளது. அண்ணாமலையின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தற்போது படம் ஒன்று உருவாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

விரைவில் படத்தில் ஆரம்பகட்ட பணிகள் துவங்கும் என கூறப்படும் நிலையில், படத்தில் அண்ணாமலை கதாபாத்திரத்தில் இவர் தான் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
அதன்படி புரட்சி தளபதி விஷால் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இவை அனைத்தும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளே ஆகும்.
ஈஸ்டர் தாக்குதலின் அரசியல் பின்னணி: ராஜபக்சர்களை அச்சத்தில் ஆழ்த்திய விசில்ப்ளோயர் சாட்சிகள் IBC Tamil
ஈஸ்டர் சதியுடன் தொடர்புடையவர்கள் வெளியே உள்ளனர்! 6-வது குற்றவாளி வெளியிட்ட பரபரப்பான கருத்து IBC Tamil