மக்களே கவனம்; தாண்டவமாடும் குரங்கம்மை - தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை!

Tamil nadu Monkeypox ‎Monkeypox virus
By Sumathi Aug 16, 2024 05:14 AM GMT
Report

குரங்கம்மை நோய் தொற்று குறித்து தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குரங்கம்மை நோய்

ஆப்பிரிக்காவில் நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் காங்கோ நாட்டில் 96 சதவீதம் அளவுக்கு பாதிப்புகளும் மற்றும் மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

மக்களே கவனம்; தாண்டவமாடும் குரங்கம்மை - தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை! | Tn Health Department Warns Monkeypox Infection

இதுவரை 524 பேர் பலியாகி உள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பு, குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக அறிவித்துள்ளது.

இதனையொட்டி மிழக பொதுசுகாதாரத்துறை, மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும், தமிழ்நாட்டிலுள்ள விமான நிலையங்களின் சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. "குரங்கம்மை பாதிப்புள்ளவர்கள் என யார் மீதாவது சந்தேகமிருந்தால், உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

தீவிரமாகும் குரங்கம்மை பரவல் - அவசரகால நிலையை பிறப்பித்த WHO

தீவிரமாகும் குரங்கம்மை பரவல் - அவசரகால நிலையை பிறப்பித்த WHO

சுகாதாரத்துறை எச்சரிக்கை

மேலும், அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, காங்கோ மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் வருபவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பயணிகளுக்கு வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.

monkeypox

கடந்த 21 நாட்களுக்குள் குரங்கம்மை பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வந்தவர்களை கண்டறியவும். குரங்கம்மை அறிகுறிகள் இருப்பவர்களை மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பதற்காக ஏற்பாடுகளை வலுப்படுத்தவும். யாருக்காவது பாதிப்பு கண்டறியப்பட்டால்,

அதுகுறித்து அவர் பயணித்த விமான நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். அந்த விமான நிறுவனம் தொற்று பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.