தீவிரமாகும் குரங்கம்மை பரவல் - அவசரகால நிலையை பிறப்பித்த WHO

World Health Organization Monkeypox ‎Monkeypox virus
By Sumathi Aug 15, 2024 05:56 AM GMT
Report

உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசரகால நிலையை பிறப்பித்துள்ளது.

குரங்கம்மை 

ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், குரங்கம்மை காய்ச்சல் பொது சுகாதார அவசரகால நிலையாக உருவாகியுள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

monkeypox

அதனால், இதனை தடுத்து நிறுத்த சர்வதேச உதவி வேண்டும். நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் காங்கோ நாட்டில் 96 சதவீதம் அளவுக்கு பாதிப்புகளும் மற்றும் மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

உடலுறவு கொள்வதால் பரவும் குரங்கம்மை - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

உடலுறவு கொள்வதால் பரவும் குரங்கம்மை - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!


அவசரகால நிலை

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, காங்கோவில் பாதிப்புகள் 160 சதவீதமும், மரணங்கள் 19 சதவீதமும் உயர்ந்துள்ளன. இதுவரை 524 பேர் பலியாகி உள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. புது வடிவிலான வைரசானது பரவி வருகிறது.

WHO Director

காங்கோவில் இருந்து புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளது. எனினும், ஆப்பிரிக்காவில் குறைந்த தடுப்பூசி டோஸ்களே இருப்பில் உள்ளன எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம்,

நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விசயம். இந்த வைரசானது ஆப்பிரிக்காவை கடந்து பரவ கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது. இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பு, குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.