இந்த 3 இடங்களில் மட்டும் ஆம்னி பேருந்துகள் நின்று செல்லும் - தமிழக அரசு அனுமதி1
ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகள்
தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன.
தொடர்ந்து, ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அரசு அறிவிப்பு
இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரனைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆம்னி பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் கொண்ட வரைபடத்தை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளை சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் ஏற்றி, இறக்க அனுமதிக்கப்படும் என்றும் பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கி விட மட்டும் அனுமதி வழங்கப்படும் எனவும் தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.