சொந்த ஊருக்கு போறீங்களா - இனி கோயம்பேட்டில் இருந்து பஸ் கிடையாது..! உறுதியாக இருக்கும் அரசு..!!
தென்மாவட்டங்களுக்கு இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
சென்னை கோயம்பேட்டில் இருந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் பேருந்து இயக்கப்பட்டு வந்தன. இதனால் சென்னை மாநகரில் பெரும் போக்குவரத்து நெரிசல் உண்டாவதாக பலதரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுக்கள் நீண்ட காலமாக வைக்கப்பட்டு வருகின்றது.
அதன் காரணமாக, வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, அண்மையில் திறக்கப்பட்டது. ஆனால், தனியார் ஆம்னி பஸ்கள் நிற்க இங்கு முறையான வசதிகள் இல்லை என்றும்,
சென்னையிலிருந்து 40 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் கிளாம்பாக்கத்தில் மக்கள் அவதிப்படுவதாகவும் தகவல்கள் எழுந்த வண்ணமே இருந்தன.
பஸ் கிடையாது
இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்ட தமிழ்நாடு அரசு தீர்வுகளையும் கண்டது. ஆனால், தனியார் ஆம்னி பேருந்து அமைப்புகள் தரப்பில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து தொடர் குற்றச்சாட்டுக்கள் இன்னும் வைக்கப்பட்டு தான் வருகின்றன.
இந்த சூழலில் தான் தற்போது, தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்துமே கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 710 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 160 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.