இன்னைக்கு ஊருக்கு போறீங்களா..?கோயம்பேடு வராதீங்க...முக்கிய அறிவிப்பு பலகை..!
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையம் நேற்று முதல் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தான் அநேக இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதன் காரணமாக சென்னை உட்புற சாலைகள் பெரும் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வந்தன.
அதன் காரணமாக வடமாநிலங்களுக்கு செல்ல பேருந்துகள், மாதவரம் முனையத்தில் இருந்து இயக்கப்பட்டன. ஆனால், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்தே இயக்கப்படுவதால், தொடர்ந்து சென்னை தாம்பரம் - கிண்டி சாலைகள் கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்தன.
இதற்கு தீர்வு காணும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
அறிவிப்பு பலகை..!
இந்த பேருந்து முனையத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேற்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து இன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முக்கிய பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அதில், கனவான கவனத்திற்கு 31-12-2023 முதல் முன்பதிவு செய்த / செய்யாத பயணிகள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு முன்பதிவு செய்தோர் / பயணம் செய்ய விரும்புவோர் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.