புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னையில் போக்குவரத்து மாற்றம்...!

Chennai Greater Chennai Corporation
By Karthick Dec 31, 2023 04:34 AM GMT
Report

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, சென்னையில் இன்று மாலை முதல் நாளை காலை வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து மாற்றம்

புத்தாண்டு என்பதால் பொதுமக்கள் பலரும் பல இடங்களில் கூடி தங்களது புத்தாண்டை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுருப்பர் . அதன் காரணமாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், அசம்பாவிதங்களை தடுத்திடவும் சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

traffic-change-in-chennai-due-to-new-year-parties

சென்னை காமராஜர் சாலை, எலியட் கடற்கரை சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து போக்குவரத்துக் காவல்துறை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை இன்று(31.12.2023) இரவு 8 மணி முதல் நாளை (01.01.2024) காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்துக்காக நிறுத்தப்படுகிறது.

traffic-change-in-chennai-due-to-new-year-parties

அடையாறில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்ல வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை - தெற்கு கால்வாய் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு மந்தவெளி, RK மட் ரோடு வழியாக லஸ் மயிலாப்பூர் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. அதே போல, கடற்கரை உட்புறச்சாலை இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 06.00 மணி வரை போக்குவரத்துக்காக நிறுத்தப்பட்டு, வாகனங்கள் நிறுத்தவும் அனுமதி மறுக்கப்படுகிறது.

வீதிமீறல் 

மேலும், பாரதி சாலை - விக்டோரியா விடுதி சாலை, நடேசன் சாலை - டாக்டர் RK சாலை சந்திப்பில் இருந்து காந்தி சிலை வரையில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. ராஜாஜி சாலை மற்றும் வாலாஜா முனையிலிருந்து போர் நினைவிடம் நோக்கி கொடி மரச்சாலையில் இரவு 8 மணி முதல் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.

traffic-change-in-chennai-due-to-new-year-parties

மாநகர பேருந்துக்கள் அனைத்தும் அடையாரிலிருந்து பாரிஸ் நோக்கிச் செல்லும் தெற்கு கால்வாய் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு மந்தவெளி, புனித மேரி சாலை, இராயப்பேட்டை வழியாக கத்திட்ரல் ரோடு, அண்ணாசலை வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. சென்னையிலுள்ள அனைத்து மேம்பாலங்களும் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மூடப்படுகின்றன. ANPR, CCTVகேமராக்களின் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டள்ளது.