மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு -உடனே அப்ளை பண்ணுங்க!
தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு
தமிழக அரசு சார்பாக மக்கள் நல திட்டங்கள் மற்றும் நிதி உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாவட்டம், வடசென்னைக்குட்டபட்ட பார்வையற்ற மற்றும் வாய் பேச இயலாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகள் திறன்பேசி பெற இ-சேவை மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பார்வையற்ற மற்றும் வாய் பேச இயலாத,காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திறன்பேசி பெற தங்களுக்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையத்தில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போன்
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ், UDID அட்டை ஆதார் அட்டை மற்றும் இளங்கலை கல்வி/முதுகலைக்கல்வி பயில்பவர்கள். பணிபுரிபவர்கள்/சுயதொழில் புரிபவர்கள் அதற்கான உரிய சான்றுகளுடன் ஒருவார காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.
'இ - சேவை' மையத்தின் வாயிலாக, https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணைப்பில் தங்களது விபரங்களை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.