பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு; இனி கவலை வேண்டாம் - மகளிர் உரிமை துறை அறிவிப்பு!
பெண்களுக்கான மகளிர் உரிமைத் துறை தோழி தங்கும் விடுதிகளை அமைத்து வருகிறது.
பெண்களுக்கு..
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மகளிர் நலனை மேம்படுத்தும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, அரசு பள்ளிகளில் பயின்று வரும் பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்க்கும் புதுமைப் பெண் திட்டம்,
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணம் திட்டம் போன்றவை உதாரணமாக கூறலாம்.
தமிழக அரசின் முழு குறிக்கோள் பெண்கள் பொருளாதாரத் தேவைகளுக்காக யாரையும் எதிர்பார்க்க கூடாது என்பதாகும். அந்த வகையில், பணி நிமித்தம் சொந்த ஊரை விட்டு வெளியூருக்கு வரும் பெண்கள் குறைந்த செலவில், வசதியாக பாதுகாப்பாக இருக்க தோழி விடுதிகள் என்னும் சூப்பர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சூப்பர் வாய்ப்பு
பணிபுரியும் மகளிர் விடுதி கழகத்தின் மூலம் 10 தோழி விடுதிகளை தமிழக அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தி வருகுறது. இந்த விடுதி இதுவரையிலும் 9 மாவட்டங்களில் அமைக்க உள்ளனர்.
அதன்படி திருச்சி, கூடுவாஞ்சேரி மற்றும் தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில் 687 பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.31.07 கோடி செலவில் அமைக்கப்பட்ட உள்ளது. இதன்மூலம்,553 பணிபுரியும் மகளிர் பயனடைந்து வருகின்றனர்.
2ம் கட்டமாக ஓசூர், திருவண்ணாமலை மற்றும் செயின்ட் தாமஸ் மவுண்ட் (செங்கல்பட்டு) ஆகிய 3 இடங்களில் 432 பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.35.86 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன.
அரசு அறிவிப்பு
சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் அடையாறு (சென்னை) ஆகிய 7 இடங்களில் 476 படுக்கை வசதிகள் கொண்ட விடுதிகளை புதுப்பித்தல் மற்றும் சீரமைப்பு பணிகள் ரூ.4.21 கோடியில் மேற்கொள்ளப்பட்டது.
இவ்விடுதிகள் கண்காணிப்பு கேமரா, பயோ மெட்ரிக் அணுகல், இலவச வைஃபை, இன்வெர்ட்டர், கீசர், 24x7 பாதுகாப்பு சேவைகள் விடுதி பராமரிப்பு, இணையதளம் முன்பதிவு போன்ற வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றன.
சமூக நலத் துறையின் கீழ் செயல்படும் 10 தங்கும் மகளிர் விடுதிகள், நவீன வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகள் வழங்குவதற்காக தமிழ் நாடு பணிபுரியும் மகளிர் விடுதி கழகத்திற்கு 2024-2025ல் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அறிவித்துள்ளது.