குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்; மீண்டும் குழந்தை - தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு!
குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப கட்டுப்பாடு
மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் ராக்கு. இவரது மனைவி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் மீண்டும் கருத்தரித்துள்ளார். தொடர்ந்து இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முறையாக செய்யப்படாததால் நான் மீண்டும் கருத்தரித்தேன். ஆண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தையை வளர்க்க மிகவும் சிரமப்படுகிறேன்.
நீதிமன்ற உத்தரவு
எனவே நீதிமன்றம் கூறியபடி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரருக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு தேவையான கல்வி மற்றும் அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்ய வேண்டும் என்றும்,
அந்த குழந்தை 21 வயது நிறைவடையும் வரை ஆண்டுக்கு ரூபாய் 1.20 லட்சம் அதாவது மாதம் 10 ஆயிரம் அரசு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.