குடும்ப கட்டுப்பாடு.. 4 பெண்கள் மரணம் - அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம்!
கருத்தடை செய்துக் கொண்ட நான்கு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப கட்டுப்பாடு
தெலங்கானா, ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கருத்தடை முகாம் நடந்துள்ளது. அதில் குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்ட 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அந்த முகாமில் டபுள் பஞ்சர் லேப்ராஸ்கோபி (DPL) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக பெண்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். இதனால், இச்சம்பவம் குறித்து பொது சுகாதாரத்துறை மாநில இயக்குநர் ஜி சீனிவாச ராவ் தலைமையில் விரிவான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
4 பெண்கள் மரணம்
மேலும் அவர் 7 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, இப்ராகிம்பட்டினம் போலீஸார் பேசுகையில், DPL என்பது ஒரு பெண் கருத்தடை திட்டம் ஆகும். ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள இப்ராஹிம்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 25-ம் தேதி 34 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
முன்னதாக, கருத்தடை அறுவை சிகிச்சை செய்த கொண்ட இருவர் உயிரிழந்த நிகழ்ந்த நிலையில், மற்ற இருவரும் திங்கள்கிழமை மாலை இறந்தனர். மாநில அரசின் இரண்டு படுக்கையறை வீடு திட்டத்தின் கீழ், பெண்களின் உறவினர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் மற்றும் வீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
பிரேத பரிசோதனை
பாதிக்கப்பட்டவர்களுக்கு இரைப்பை குடல் அழற்சி (GE) உள்ளிட்ட அறிகுறிகள் இருந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த சீனிவாச ராவ், பிரேத பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்றார்.
நான்கு இறப்புகளை அடுத்து, 30 பெண்களின் உடல்நிலை குறித்து பரிசோதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நகரத்தில் உள்ள ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் ஏழு பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உரிமம் தற்காலிக ரத்து
மேலும் இருவர் இங்குள்ள அரசு நிஜாம் மருத்துவ அறிவியல் கழகத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 30 பெண்களில் எவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை. பாதிக்கப்பட்ட பெண்களின் குழந்தைகளின் கல்விக்கான பொறுப்பை அரசு ஏற்று கொண்டுள்ளது.
சிகிச்சை நடந்த மருத்துவமனையின் சூப்பிரண்டன்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை செய்த மருத்துவரின் உரிமம் தற்காலிகமாக பறிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.