முஸ்லீம்கள்தான் அதிக அளவில் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துகின்றனர் - ஓவைசி கருத்து
யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி கருத்து தெரிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத் கருத்து
மக்கள் தொகை சமத்துவமின்மை ஏற்படக்கூடாது என்றும் மக்கள் தொகை கட்டுப்பாடு விழிப்புணர்வு காரணமாக பூர்வக்குடிகள் இடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றும் ஆனால் ஒரு குறிப்பிட்ட சாரரின் மக்கள் தொகை மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் பேசி இருந்தார்.
இதனிடையே இஸ்லாமிய மக்கள் குறித்துதான் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளதாக தகவல் பரவியது. யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி கருத்து தெரிவித்துள்ளார்.
ஓவைசி பதிலடி
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், இஸ்லாமிய மக்கள்தான் அதிக அளவில் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துகின்றனர். முஸ்லிம்கள் இந்தியாவின் பூர்வீக குடிகள் இல்லையா?
யதார்த்தத்தைப் பார்த்தால், பழங்குடியினரும் திராவிட மக்களும் மட்டுமே பூர்வீகக் குடிகள். உத்தரபிரதேசத்தில், எந்த சட்டமும் இல்லாமல், விரும்பி கருவுறுதல் விகிதம் 2026-2030க்குள் அடையப்படும் என கூறியுள்ளார்.
மக்கள்தொகை
மேலும், ‘மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக்கு நாட்டில் எந்தச் சட்டமும் தேவையில்லை என்று சுகாதார அமைச்சர் கூறினார். கருத்தடை மருந்துகளை அதிகம் பயன்படுத்துபவர்கள் முஸ்லிம்கள்.
2016ல் 2.6 ஆக இருந்த மொத்த கருவுறுதல் விகிதம் தற்போது 2.3 ஆக உள்ளது. நாட்டின் மக்கள்தொகை உலகின் மற்ற நாடுகளை விட சிறந்தது’எனவும் அவர் குறிப்பிட்டார்.