13 குழந்தைகளை பெற்ற தந்தை; குடும்ப கட்டுப்பாடு செய்ய போராடிய மருத்துவக் குழு - வனப்பகுதியில் பதுங்கியதால் பரபரப்பு

Tamil nadu Erode
By Thahir Apr 03, 2023 06:28 AM GMT
Report

13 குழந்தைகளை பெற்ற பழங்குடியின தந்தைக்கு மருத்துவக் குழுவினர் குடும்பக் கட்டுப்பாட்டு செய்து வைத்தனர்.

13 குழந்தைகளை பெற்ற தந்தை 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ஒன்னகரை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன மாதையன் (46). பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், இவருடைய மனைவி சாந்தி (42) இந்த தம்பதிக்கு 12 குழந்தைகள் ஏற்கனவே உள்ளனர்.

இந்த நிலையில், சாந்தி மீண்டும் கருத்தரித்த நிலையில், அவருக்கு 4 நாட்களுக்கு முன்பு 3 கிலோ எடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்த 13 குழந்தைகளும் வீட்டிலேயே பிரசவமாகியுள்ளன. இதையடுத்து 13 வயது குழந்தையை வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், காவல்துறை, தன்னார்வலர்கள் குழு ஒன்னகரை கிராமத்துக்கு நேற்று முன்தினம் சென்றனர்.

13 குழந்தைகளை பெற்ற தந்தை; குடும்ப கட்டுப்பாடு செய்ய போராடிய மருத்துவக் குழு - வனப்பகுதியில் பதுங்கியதால் பரபரப்பு | Family Planning For A Father With 13 Children

குழந்தையின் உடல் நலனைப பரிசோதித்த மருத்துவக் குழுவினர், தாய் சாந்தியைப் பரிசோதித்தனர். இதில் அவருக்கு ரத்த சோகை பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

குடும்ப கட்டுப்பாடு செய்ய போராட்டிய மருத்துவ குழு 

இதன் காரணமாக அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை இருப்பதைக் கண்டறிந்தனர்.

இதையைடுத்து அவரது கணவரான சின்ன மாதையனுக்கு ஆண்களுக்கான நவீன கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மறுத்த சின்ன மாதையனிடம் மீண்டும் சாந்தி கர்ப்பமடைந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்துள்ளனர்.

பின்னர் சின்ன மாதையன் குடும்ப கட்டுப்பாடு செய்ய ஒப்புக்கொண்டார்.இதையடுத்து அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 10 மாதங்களுக்கு முன்பெல்லாம் சாந்தி கர்ப்பமடைந்த தகவல் அறிந்து மருத்துவக்குழுவினர் வரும் போதெல்லாம் வனப்பகுதிக்குள் சென்று பதுங்கிவிடுவார்கள் என்று மருத்துவ குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.