மமதையில் உள்ள பாஜகவின் பாசிச ஆட்சி வீழட்டும், இந்தியா வெல்லட்டும்! முதல்வர் மு.க ஸ்டாலின்!

M K Stalin BJP Lok Sabha Election 2024
By Swetha Jun 01, 2024 07:48 AM GMT
Report

பாசிச பாஜக ஆட்சி வீழட்டும், இந்தியா வெல்லட்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

பாஜக பாசிச ஆட்சி

நடப்பாண்டில் மக்களவை தேர்தல் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றது. இதுவரையிலும் 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது 7ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மமதையில் உள்ள பாஜகவின் பாசிச ஆட்சி வீழட்டும், இந்தியா வெல்லட்டும்! முதல்வர் மு.க ஸ்டாலின்! | Tn Cm Stalin Tweets About Bjp

இன்று 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 நாடாளுமன்றத் தொகுதிகளில் நடைபெறுகிறது.இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், பா.ஜ.க.வின் பத்தாண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி,

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது. தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பா.ஜ.க.வுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணித்திரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது.

இந்தியா என்ற சொல்லே பாஜக'வை மிரட்டுகிறது...முதல்வர் முக ஸ்டாலின்..!!

இந்தியா என்ற சொல்லே பாஜக'வை மிரட்டுகிறது...முதல்வர் முக ஸ்டாலின்..!!

முதல்வர் ஸ்டாலின்

தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பா.ஜ.க. உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன.

மமதையில் உள்ள பாஜகவின் பாசிச ஆட்சி வீழட்டும், இந்தியா வெல்லட்டும்! முதல்வர் மு.க ஸ்டாலின்! | Tn Cm Stalin Tweets About Bjp

வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.ஜூன் 4 - இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும்.

இது தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கழகப் பொருளாளரும் - நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார். பாசிச பா.ஜ.க. வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்! என்று குறிப்பிட்டுள்ளார்.