இந்தியா என்ற சொல்லே பாஜக'வை மிரட்டுகிறது...முதல்வர் முக ஸ்டாலின்..!!

M K Stalin Tamil nadu BJP Narendra Modi
By Karthick Sep 05, 2023 09:15 AM GMT
Report

இந்தியாவிற்கு பாரத் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அது குறித்து தமிழக முக ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

பெயர் மாறுகிறதா இந்தியா..?

ஜி 20 மாநாடு அழைப்பிதழ் இந்தியாவில் நடைபெறத்தவுள்ள ஜி 20 மாநாடு அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என அச்சிடப்படாமல், பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

stalin-slams-bjp-in-india-name-change

இதன் காரணமாக இந்திய நாட்டின் பெயர் பாரத் என மாற்றப்படுமா? என்ற கேள்வி பல்வேறு வகையில் எழுப்பப்பட்டு வருகின்றது. இதில், தற்போது திமுகவின் தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

முக ஸ்டாலின் ட்வீட்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு #INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது என பதிவிட்டுள்ளார்.

stalin-slams-bjp-in-india-name-change

மேலும், இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது என சாடியிருக்கும் அவர், அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது என குறிப்பிட்டு, தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும் என பதிவிட்டுள்ளார்.