உதயநிதியால் தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது...அண்ணாமலை..!!
உதயநிதியால் தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு
இன்று இமானுவேல் சேகரனுக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உதயநிதியால் பாஜக வளர்ந்து வருவதாக கூறிய அண்ணாமலை, தகுதி திறைமையில்லாதவர்கள் குடும்ப அரசியலால் பாஜக வளர்ந்து வருவதாக கூறினார்.
சனாதன ஒழிப்பு குறித்து எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் வெறும் பேச்சுக்களை தெரிவித்து வரும் உதயநிதியால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பதில் வரும் என கூறினார். சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு விலை வைத்த நிலையில் அதனை அண்ணாமலை கண்டித்து கருத்து தெரிவித்தார்.
பாரத் - கலாச்சாரத்திற்கு நெருக்கமானது
சினிமாவில் இருந்து நல்ல கருத்துக்கள் வரவேண்டும் என கூறிய அவர், ஆனால் வன்முறை சம்பவங்களை தூண்டும் கருத்துக்களை கூறும் படங்கள் தவிர்க்கப்படவேண்டியவை என தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பேசிய அண்ணாமலை, இது சாத்தியமா? இல்லையா என்பது தெரியவில்லை என கூறி, தற்போது அது நடத்தப்பட முடியுமா? என்று தான் குழு அமைக்கப்பட்டுள்ளது என கூறினார்.
பாரத் இந்தியா என்ற இரண்டு பெயர்களும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் காரணத்தால், பெரிய மாற்றம் இல்லையென்றும், ஜி 20 மாநாட்டில் பாரத் என பிரதமர் குறிப்பிடத்தில் எந்த தவறும் இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார். அதே நேரத்தில், தன்னை பொறுத்தவரை பாரத் என பெயர் வந்தால் அது நமது கலாச்சாரத்திற்கு இன்னும் நெருக்கமான பெயராக இருக்கும் என கூறினார்.