அரசு பள்ளியின் அவலம் .. சினிமா டயலாக் பேசுவது ஒன்றே அமைச்சரின் தகுதி -அண்ணாமலை!

DMK K. Annamalai Anbil Mahesh Poyyamozhi Education
By Vidhya Senthil Feb 10, 2025 05:36 AM GMT
Report

திரைப்பட பாணியில் வசனங்கள் பேசுவது ஒன்றே அமைச்சரின் தகுதி என்று நினைத்துக் கொண்டிருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

அரசுப் பள்ளி

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,’’பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில், சுவர் இல்லை, கூரை இல்லை, போதிய ஆசிரியர்களும் இல்லை, வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் கல்வி. இது தான் தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறையின் லட்சணம்.

அரசு பள்ளியின் அவலம் .. சினிமா டயலாக் பேசுவது ஒன்றே அமைச்சரின் தகுதி -அண்ணாமலை! | Tn Bjp Annamalai Slams Minister Anbil Mahesh

திருச்சி மாவட்டம், பச்சை மலையில் உள்ள ராமநாதபுரம் என்ற கிராமத்தில் உள்ளது இந்த பள்ளி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப் போவதாகக் கூறி, பழைய கட்டிடத்தை இடித்துள்ளனர். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் புதிய கட்டிடம் கட்டப்படவில்லை.

மாணவர்களின் கல்வித் திறன்.. உத்தர பிரதேசத்தை விட பின்தங்கிய தமிழ்நாடு -அதிர்ச்சி தகவல்!

மாணவர்களின் கல்வித் திறன்.. உத்தர பிரதேசத்தை விட பின்தங்கிய தமிழ்நாடு -அதிர்ச்சி தகவல்!

மகனின் ரசிகர்மன்ற தலைவருக்கு பதவி கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருந்திருந்தால், சினிமாத் துறை என்ற புதிய துறையை உருவாக்கி, திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை அமைச்சர் ஆக்கியிருக்க வேண்டியது தானே முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களே.

அண்ணாமலை

என் ஏரியா, உன் ஏரியா என்று திரைப்பட பாணியில் வசனங்கள் பேசுவது ஒன்றே அமைச்சரின் தகுதி என்று நினைத்துக் கொண்டிருப்பவருக்குப் பொருத்தமாக இருந்திருக்கும். பள்ளிக் கல்வித்துறைக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி 44,042 கோடி ரூபாய். எங்கே செல்கிறது இந்த நிதி?

அரசு பள்ளியின் அவலம் .. சினிமா டயலாக் பேசுவது ஒன்றே அமைச்சரின் தகுதி -அண்ணாமலை! | Tn Bjp Annamalai Slams Minister Anbil Mahesh

அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தல் உட்பட பல்வேறு பணிகளுக்காக 2021 தொடங்கி 2024 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட சமக்ர சிக்ஷா திட்ட நிதி ரூ.5,583 கோடி எங்கே போனது? வாங்கிய நிதியை முறையாகப் பயன்படுத்தாமல், மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று பொய் கூறக் கூச்சமாக இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.