மாணவர்களின் கல்வித் திறன்.. உத்தர பிரதேசத்தை விட பின்தங்கிய தமிழ்நாடு -அதிர்ச்சி தகவல்!
தமிழ் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்து வெளியான ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கல்வித் திறன்
நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக ASER (Annual Status of Education Report) ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இது தொடர்பான அறிக்கை வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் 876 கிராமங்களில் 3 வயது முதல் 16 வயதிலான 28,984 மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.இதில் கிராமப்புற பகுதிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 35% பேருக்கும் 5ம் வகுப்பில் படிக்கும் 64% பேருக்கும் 2ம் வகுப்பு புத்தகங்களை வாசிக்க இயலவில்லை 4 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உத்தராகண்ட், பஞ்சாப், கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மாணவர்களின் கல்வித் திறன் தமிழ்நாட்டை விட முன்னேறி இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாகக் கர்நாடகாவும் தெலங்கானாவும் தமிழ்நாட்டை விட பின்தங்கி இருப்பதாக அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளது.
அதிர்ச்சி
மேலும் தமிழ் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறைந்ததற்கான காரணம் மாணவர்கள் செல்போன்களில் கல்வி கற்றுக் கொள்வதற்காகப் பயன்படுத்தும் விகிதம் தேசிய சராசரியை விடக் குறைவாக உள்ளதாக ASERஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், 14 வயது முதல் 16 வயதிலான சிறுவர்களில் 90% பேர் தங்களுக்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர்.குறிப்பாகத் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிந்துள்ளதற்கான விகிதம் தேசிய சராசரி விகிதத்தை விட அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் ஆளும் அரசு மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ASER ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan