திடீரென ராஜினாமா செய்த அரசு தலைமை வழக்கறிஞர் - என்ன காரணம்?
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா செய்துள்ளார்.
சண்முகசுந்தரம்
சண்முககசுந்தரம் 1977 இல் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். திமுக ஆட்சியில் 1989-1991 இல் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகவும்,1996-2001 இல் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராகவும் இருந்தார்.
மேலும் இவர் திமுக சார்பாக இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு உறுப்பினராக (2002-2008) இருந்தார். இதனைத் தொடர்ந்து 2021 இல் திமுக அரசு பொறுப்பேற்றதும் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்.
ராஜினாமா
இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காகத் தனது அரசு தலைமை வழக்கறிஞர் பதவியை ஆர்.சண்முகசுந்தரம் ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகி, தனித்த முறையில் வழக்கறிஞராக இயங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது முடிவை முதல்வர் மற்றும் அரசு தலைமை அதிகாரிகளிடத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது, அடுத்த தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.