தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமனம்!
தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சண்முகசுந்தரம் பிறந்த ஊர் திருநெல்வேலி. இவர், 1977ல் சென்னை வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராக பதவி ஏற்றார். 2015-2017ல் சென்னை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக இருந்த இவர், இங்கிலாந்து நீதிமன்றங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
கடந்த 2002 - 2008ம் ஆண்டு வரையிலான மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார் சண்முகசுந்தரம். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஜெயின் கமிஷனுக்கு உதவ தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்டவர்.
1989 முதல் 1991ம் ஆண்டு வரையிலாக காலக்கட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசின் கூடுதல் வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.