மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா..!
சென்னை உயர்நீதிமன்ற விழாவில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள் என தெரிவித்தார்.
சென்னை வழக்கறிஞர்கள் நீதித்துறையே வலுப்படுத்தும் பணிகளில் முக்கிய பங்காற்றுகின்றனர் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் மொழி,அடையாளம்,மிக்கவர்கள் மொழிக்காக முதலில் வருபவர்கள். வழக்கறிஞர்களின் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்.
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து என்ற திருக்குறளை மேற்கொள்காட்டி பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சென்னை வழக்கறிஞர்கள் நீதித்துறையை வலுப்படுத்தும் பணிகளில் முக்கிய பங்காற்றுகின்றனர்.
மக்களின் நம்பிக்கையை நீதித்துறை பூர்த்தி செய்யும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா. காலியாக உள்ள 200 காலியிடங்களை நிரப்ப உயர்நீதிமன்றம் விரைந்து பரிந்துரைகளை அனுப்பும் என்று நம்புகிறேன்.
தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி மாநில மொழிகளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும். முதலமைச்சர் கடின உழைப்பால் வருங்காலத்தில் தமிழகம் பிரகாசமாக இருக்கும். மேலும் தமிழக அரசு வழக்கறிஞர்களுக்கு சேம நல நிதி வழங்கி உதவி செய்கிறது என தெரிவித்தார்.