Wednesday, May 21, 2025

வெளியான +2 ரில்சட்; எங்கு எப்படி பார்க்கலாம்? இதோ முழு நிலவரம்!

Tamil nadu Education
By Sumathi 13 days ago
Report

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.

 பொதுத்தேர்வு முடிவு

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25-ம் தேதி நிறைவடைந்தது.

tn 12th result

இதனை 7,518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18, 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுதினர்.

தொடர்ந்து . தமிழ்நாடு முழுவதும் 83 மையங்களில் விடைத்தாள் திருத்துதல் பணிகள் நடைபெறுகின்றன. சுமார் 46,000 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

எடப்பாடி உத்தரவு போட்டா நாங்க 1000 பேர் யுத்த களத்தில் சண்டையிட தயார் - ராஜேந்திர பாலாஜி

எடப்பாடி உத்தரவு போட்டா நாங்க 1000 பேர் யுத்த களத்தில் சண்டையிட தயார் - ராஜேந்திர பாலாஜி

எப்படி பார்க்கலாம்? 

தமிழகத்தில் 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் - 96.70 விகிதமும், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் - 93.16 விகிதமாகும். கடந்த ஆண்டுகளை விட கூடுதல் விகிதத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

anbil magesh poyyamozhi

வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளங்களான www.tnresults.nic.in மற்றும் dge1.tn.nic.in dge2.tn.nic.in ஆகியவற்றின் வாயிலாக அறியலாம்.

இது தவிர TN HSE(+2)Results என்கிற மொபைல் ஆப் மூலமாகவும் ரிசல்ட்டை தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.