டைட்டானிக் மூழ்குவதற்கு முன்னமே கணித்த பயணி? ரூ.3 கோடிக்கு ஏலம் போன அந்த கடிதம்

New York Accident Titanic Submarine
By Sumathi Apr 28, 2025 07:06 AM GMT
Report

 டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த ஒருவர் எழுதிய கடிதம் 3 கோடிக்கு ஏலம் போகியுள்ளது.

டைட்டானிக்

உலகின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் டைட்டானிக். 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்குச் சென்றது.

டைட்டானிக் மூழ்குவதற்கு முன்னமே கணித்த பயணி? ரூ.3 கோடிக்கு ஏலம் போன அந்த கடிதம் | Titanic Passenger Letter Sells 3Crore Record Price

தனது முதல் பயணத்திலேயே அட்லாண்டிக் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இந்த திடீர் விபத்தில் சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,

கடவுளுடன் மனிதர்கள் பேசத் தொடங்குவார்கள்;எப்போது? கவனம் ஈர்க்கும் பாபா வங்கா கணிப்பு

கடவுளுடன் மனிதர்கள் பேசத் தொடங்குவார்கள்;எப்போது? கவனம் ஈர்க்கும் பாபா வங்கா கணிப்பு

கடிதம் ஏலம்

இந்த கப்பல் விபத்து ஹாலிவுட் படமாகவும் எடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கப்பலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம்.

titanic

அந்த வரிசையில், டைட்டானிக்கில் பயணித்த கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசி என்பவர் எழுதிய ஒரு கடிதம் லண்டனில் ஏலத்துக்கு விடப்பட்டது. இதனை ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் என்பவர் சுமார் 3 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

அந்த கடிதத்தில் பயணம் நிறைவு செய்த பிறகே சிறந்த கப்பல் என்று தீர்ப்பு வழங்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டைட்டானிக் கப்பல் மூழ்கும் ஐந்து நாட்களுக்கு முன்பு இந்த கடிதம் எழுதப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.