இந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே.. கோகோ கோலாவின் புதிய தயாரிப்பு
கோகோ கோலா நிறுவனம் ஸ்பெஷலான ஒரு பானத்தை தயாரித்து வருகிறது.
கோகோ கோலா
கோகோ கோலா நிறுவனம் யூத மக்களின் நம்பிக்கைக்காகவே குறிப்பாக ஒரு தனித்துவமான பானத்தை தயாரித்து வருகிறது. இந்த கோகோ கோலா பாட்டிலின் மூடி மஞ்சள் நிறத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
யூதர்கள் பாஸ்ஓவர் (Passover) என்ற மதம் சார்ந்த ஒரு விடுமுறையைக் கொண்டாடுகின்றனர். அப்போது சோளம், கோதுமை, பார்லி மற்றும் பீன்ஸ் வகைகள் போன்ற தானியங்களால் ஆன உணவை தவிர்க்கின்றனர்.
புதிய தயாரிப்பு
எனவே இதற்கு மதிப்பளித்து சோளம் இல்லாத கோகோ கோலா பானத்தை தயாரிக்கிறது. இதில் கார்ன் சிரப்புக்கு பதிலாக கரும்பு சர்க்கரை சேர்க்கப்படுகிறது.
யூதர்கள் அல்லாதவர்களும் இந்த கேன் சுகர் கொண்டு தயாரிக்கப்பட்ட கோகோ கோலாவை ஆர்வத்தோடு பருகுகின்றனர்.