இனி சொர்க்கவாசல் திறப்பு இல்லை; முதலமைச்சர் திடீர் அறிவிப்பு - பக்தர்கள் அதிர்ச்சி!
சொர்க்கவாசல் திறப்பு குறித்து முதலமைச்சர் முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.
சொர்க்கவாசல் திறப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த லட்சக்காண பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இங்கு சொர்க்கவாசலில் சென்று தரிசனம் செய்ய முன்தினம் இரவு இலவச தரிசன டோக்கன்கள் விநியோகிக்கும் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சேலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 6 பக்தர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, சம்பவ இடத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சர் தகவல்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவியும், தேவஸ்தானத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியும் வழங்கப்படும்.
நெரிசல் ஏற்பட்ட இடத்தில் பணியில் இருந்த டிஎஸ்பி ரமண குமார் மற்றும் அந்த பகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த தேவஸ்தான அதிகாரி ஹரிநாத ரெட்டி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஸ்பி சுப்பராயுடு, தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி கவுதமி, முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தனி நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் காலம் 10 நாட்கள் என கடந்த 2022-ஆம் ஆண்டு மாற்றப்பட்ட நிலையில், பழைய முறைப்படி 2 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் என்று மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.