இவர்களுக்கெல்லாம் திருப்பதியில் தங்கும் அறை கிடையாது - தேவஸ்தானம் முடிவு!
திருப்பதியில் தங்கும் அறை தொடர்பான முடிவை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பிரம்மோற்சவ விழா
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகளவில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.
அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது. எனவே, திருமலையில் குவியும் பக்தர்களுக்கு அதிக தங்குமிடங்களை வழங்கும் நோக்கத்துடன்,
தேவஸ்தானம் அறிவிப்பு
பிரம்மோற்சவ விழா நாட்களில் நன்கொடையாளர்களுக்கு தங்குமிடம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4-ம் தேதி கொடியேற்றம் மற்றும் அக்டோபர் 12-ம் தேதி சக்கர ஸ்நானம் தவிர மற்ற நாட்களில் நன்கொடையாளர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், நன்கொடையாளர்கள் இதனை கருத்தில் கொண்டு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனவும் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.