லட்டு மட்டும் இல்ல.. இனி திருப்பதியில் இதுவும் ஃப்ரீ தான் - முக்கிய உத்தரவு!
திருப்பதியில் பக்தர்களுக்கு வெந்நீரை இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பதி கோயில்
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகளவில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. அவ்வாறு சாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் நேர்த்திக்கடனாக முடி காணிக்கை செய்கின்றனர்.
வெந்நீர் இலவசம்
அந்த வகையில் ஒரே நாளில் மட்டும் சுமார் 27 ஆயிரம் பக்தர்கள் முடி காணிக்கை செய்துள்ளனர். இதற்கிடையில், கோவில் வளாகத்தில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்கள் குளிக்கும் அறை சற்று சுகாதாரமற்று காணப்பட்டதை அறிந்து கண்டித்தார்.
பின், முடி காணிக்கை செய்யும் பக்தர்களுக்க தேவையான அளவு வெந்நீர் வழங்கவும், பழுதடைந்த நிலையில் காணப்படும் ஹீட்டர்களை மாற்றவும் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் பக்தர்கள் குளிர் உள்ளிட்ட எந்தவித சிரமமும் இன்றி குளிக்கும் விதமாக வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.