திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடல்; முக்கிய அறிவிப்பு - என்ன காரணம்?
திருப்பதி ஏழுமலையான் கோவில் 8 மணி நேரத்திற்கு மூடப்பட்டிருக்கும்.
திருப்பதி கோவில்
சந்திர கிரகணம் என்பது பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் நிகழ்வாகும். நடப்பு ஆண்டில் நாளை மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் நிகழ உள்ளது.
இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும் என்பதால் இங்கு தோஷ காலம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே அந்த சமயத்தில் 5 மணி நேரத்திற்கு முன்பு கோவில்களில் நடை அடைக்கப்படுவது வழக்கம்.
சந்திர கிரகணம்
அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8 மணி நேரத்திற்கு மேல் கதவு மூடப்பட்டிருக்கும். இரவு 7.05 மணிக்கு மூடப்பட்டு 29ஆம் தேதி அன்று மீண்டும் திறக்கப்படும்.
29ஆம் ஆம் தேதி அதிகாலை 1:05 மணி முதல் 2:22 மணி வரை பகுதி சந்திர கிரகணம் நிறைவடைகிறது. இதனால் கோயில்களின் கதவுகள் 8 மணி நேரம் மூடப்பட்டிருக்கும்.
அதனால், சகஸ்ர தீபலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்கள் இலவச தரிசனம் ரத்து செய்யப்படும் என தேவஸ்தானத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.