விஐபி தரிசனம் வேணுமா; 1 கோடி முறை கோவிந்தா..கோவிந்தா..எழுதனும் - திருப்பதி தேவஸ்தானம்!
திருப்பதியில் இலவச விஐபி தரிசனத்திற்கு சலுகை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
கோவிந்தா..
திருப்பதி மலையில் திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு ஆலோசனை கூட்டம் அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் நடைபெற்றது. அறங்காவலர் குழுவின் தலைவர் கருணாகர ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய கருணாகர ரெட்டி, மாறிவரும் கால சூழ்நிலையில் சக மனிதனை மதிப்பது, இறை பக்தியுடன் செயல்படுவது ஆகியவை போன்ற அவசியமான செயல்களில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
சலுகை
இளைஞர்களிடம் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள விரும்பத்தகாத மாற்றங்களுக்கு மாற்றம் காணும் வகையில் சனாதன தர்மம் பற்றி அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக 25 வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு கோடி முறை கோவிந்தா நாமம் எழுதி எடுத்து வரும் நிலையில் அந்த நபரின் குடும்பத்திற்கு விஐபி பிரேக் தரிசன அனுமதி அளிக்கப்படும். 10 லட்சத்துக்கு ஆயிரத்து 116 முறை கோவிந்த நாமம் எழுதி எடுத்து வரும் பக்தருக்கு மட்டும் சாமி தரிசனம் அனுமதி வழங்கப்படும்.
இந்த ஆண்டில் இரண்டு முறை பிரமோற்சவங்கள் நடைபெற உள்ளன. பிரம்மோற்சவங்களை சிறப்பான முறையில் பாதுகாப்புடன் நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்து இருக்கிறோம்.
திருப்பதி ரயில் நிலையம் அருகே உள்ள இரண்டு சத்திரங்களையும் இடித்துவிட்டு அந்த இடத்தில் 600 கோடி ரூபாய் செலவில் 20000 பக்தர்கள் தங்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கட்டிடங்களை கட்ட முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.