வெடித்த லட்டு சர்ச்சை; வெறும் 8 நாட்களில்.. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

Festival Andhra Pradesh Tirumala
By Sumathi Oct 14, 2024 04:54 AM GMT
Report

8 தினங்களில் மட்டும் 30 லட்சம் லட்டுகள் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகளவில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

tirupati

இதற்கிடையில், ஏழுமலையான் கோயிலில் கள்ளச் சந்தையில் லட்டு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தொடர்ந்து, திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியுள்ள பெரும் சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், அக்டோபர் நான்காம் தேதி பிரம்மோற்சவம் விழா தொடங்கி,

இவர்களுக்கெல்லாம் திருப்பதியில் தங்கும் அறை கிடையாது - தேவஸ்தானம் முடிவு!

இவர்களுக்கெல்லாம் திருப்பதியில் தங்கும் அறை கிடையாது - தேவஸ்தானம் முடிவு!

லட்டு விற்பனை அமோகம்

அக்டோபர் 12 வரை கோலாகலமாக நடைபெற்ற நிலையில், மலையப்ப சாமி தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார். அவரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனை முன்னிட்டு 15 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கடைசி நாளில் கருட சேவை தரிசனத்தை மட்டும் சுமார் 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

laddu prassadham

மேலும், எட்டு நாட்களில் 50 ரூபாய்க்கு விரும்பத்தகுந்த சிறிய லட்டுகள் மட்டும் 30 லட்சம் வரை விற்பனையானதாகவும், கடந்த ஆண்டும் இதே போன்ற விற்பனைகள் நடைபெற்றதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.