லட்டில் மாட்டுக் கொழுப்பு; இனி திருப்பதிக்கு என்னாகும்? பின்னணி!
லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக அதிர்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளது.
திருப்பதி லட்டு
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகளவில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இதற்கிடையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கள்ளச் சந்தையில் லட்டு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியுள்ளனர்.
இதற்காக அப்போது தயாரிக்கப்பட்ட லட்டுகள் மீதான சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த 5 மதிப்புகளில் 2 மற்றும் 3வது சாம்பிள்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட எஸ் மதிப்பு கூடுதலாக உள்ளது. மற்றவர்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட எஸ் மதிப்பு குறைவாக உள்ளது.
என்ன நடக்கும்?
தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இதனையடுத்து திருமலை பிரசாதம் தொடர்பாக நாயுடுவின் கருத்துக்கள் உண்மையிலேயே கேவலமானவை. மனிதப் பிறவியில் பிறந்த எவரும் இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசுவதில்லை, இப்படி குற்றஞ்சாட்டுவதில்லை.
அரசியலுக்காக எந்த மட்டத்திலும் இறங்கவும் தயங்கமாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது என நாயுடுவின் குற்றச்சாட்டுகளுக்கு YSRCP கடுமையாக பதிலளித்துள்ளது.
தற்போது தீவிர இந்துக்கள், மாமிசம் சாப்பிடாத இந்துக்கள், மாட்டுக்கறி சாப்பிடாத இந்துக்கள் அங்கு செல்வது குறையும். மேலும், லட்டு விற்பனை மொத்தமாக குறையும் வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.