திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதில் சாதனை செய்த நபர் - அப்படி என்ன செஞ்சுருக்காரு தெரியுமா?

Tirumala
By Sumathi Jul 10, 2024 10:28 AM GMT
Report

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதில் நபர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான்

ஸ்ரீகாகுளம் நகரைச் சேர்ந்தவர் மஹந்தி ஸ்ரீனிவாச ராவ். இவர் ஏழுமலையானின் தீவிர பக்தர். இதுவரை 449 முறை ஏழுமலையானை பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்துள்ளார்.

tirupati

1997 ஆம் ஆண்டு தனது முதல் பாத யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்பிறகு 26 ஜூலை 2018 வரை மட்டுமே 175 முறை தரிசித்து முடித்துள்ளார்.

திருப்பதி தரிசனம்: இனி வரிசையில் நிற்க தேவையில்லை - தேவஸ்தானம் முக்கிய முடிவு!

திருப்பதி தரிசனம்: இனி வரிசையில் நிற்க தேவையில்லை - தேவஸ்தானம் முக்கிய முடிவு!

பக்தர் சாதனை

2017ஆம் ஆண்டு, 50 வயதில், சீனிவாச ராவ் 50 முறையும், அதன் பிறகில் இருந்து இந்த ஆண்டு ஜூன் 26ஆம் தேதி வரை 40 முறை என பாதயாத்திரையாக சென்றுள்ளார்.

மஹந்தி ஸ்ரீனிவாச ராவ்

ஒரு நாளைக்கு ஒரு முறையில் இருந்து 3 முறை கூட மலை ஏறியுள்ளாராம். இதன்மூலம், சாதனை படைத்து ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளார்.