திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.. திடீரென அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்!
திருப்பதி தேவஸ்தானம் தரிசன முறையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தேர்தல் அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், ஆந்திர பிரதேசம், அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கான
சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன. இதனால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திலோ அல்லது தங்கும் இடத்திலோ இனி எந்த பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.
தேவஸ்தான கட்டுப்பாடுகள்
விதிமுறை பிரிவின் கீழ் வரும் உயரதிகாரிகளுக்கு மட்டுமே அவர்களின் பதவிகளுக்கு ஏற்ப அவர்களுக்குரிய சலுகைகள் வழங்கப்படும். விஐபிக்களின் பரிந்துரை கடிதங்கள் அடிப்படையில் யாருக்கும் விஐபி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படாது.
விஐபிக்கள் நேரில் வந்தால் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டு ஜூன் மாதம் தேர்தல் விதிமுறைகள் முடியும் வரை
இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கோடை விடுமுறையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.