திருப்பதியில் கொட்டிய ரூ.650 கோடி - மகிழ்ச்சியில் தேவஸ்தானம்!

Andhra Pradesh
By Sumathi Jan 24, 2023 04:08 AM GMT
Report

திருப்பதி கோவிலுக்கு ரூ.650 கோடி நிதி கிடைத்திருப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஸ்ரீவானி ட்ரஸ்ட்

ஆந்திரா, திருப்பதியில் ஏழுமலையான் கோயிலை தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இந்த தேவஸ்தானம் ”ஸ்ரீ வெங்கடேஸ்வர அலயால நிர்மானம் ட்ரஸ்ட்” என்ற அறக்கட்டளையை செயல்படுத்தி வருகிறது. இதில் பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர்.

திருப்பதியில் கொட்டிய ரூ.650 கோடி - மகிழ்ச்சியில் தேவஸ்தானம்! | Tirupati Trust Received 650 Crore Donation

இதில், 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்தால் அவர்களுக்கு ஒரு விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வழங்கப்படும். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஸ்ரீவானி ட்ரஸ்டிற்கு 650 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

ரூ.650 கோடி நிதி

மேலும் ஸ்ரீவானி ட்ரஸ்டில் உள்ள நிதியானது படிப்படியாக மாநில அரசுக்கு அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி விளக்கமளித்துள்ள தர்மா ரெட்டி, ஸ்ரீவானி ட்ரஸ்டிற்கு பெறப்படும் நிதி முழுவதும் வெளிப்படையான முறையில் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கென்று தனியாக ஒரு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. நிரந்தர வைப்புத் தொகையாக வெளிப்படைத் தன்மை உடன் பணம் போடப்படுகிறது. தேவஸ்தானத்தின் பொது வங்கிக் கணக்கில் கூட போடப்படுவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.