புஷ்பா-2 பார்க்க போன நைட் டியூட்டி உதவி கமிஷனர் - சிக்கியதால் பரபரப்பு!
பணியின் போது உதவி கமிஷனர் படம் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புஷ்பா 2
நெல்லையில் இரவு நேரங்களில் போலீஸ் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் டவுன், சந்திப்பு, பாளை, மேலப்பாளையம் ஆகிய 4 இடங்களிலும் பெண் இன்ஸ்பெக்டர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு தலைமையாக உதவி போலீஸ் கமிஷனர் இருவரும் பணியி இருந்துள்ளார். ஆனால், இரவு 11.30 மணிக்கு உடையார்பட்டி பகுதியிலுள்ள தியேட்டருக்கு புஷ்பா 2 படம் பார்க்க சென்றுள்ளார். தியேட்டருக்கு வெளியே ஜீப்பில் காவலுக்கு டிரைவர் இருந்துள்ளார்.
இந்நிலையில், போலீஸ் கமிஷனர் திடீரென வாக்கி டாக்கில் வந்து உதவி கமிஷனரை கூப்பிட்டுள்ளார். அவர் பதிலளிக்காததை தொடர்ந்து அவர் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்ததை தெரிந்து கொண்டார். இதற்கிடையில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார்,
சிக்கிய உதவி கமிஷனர்
உதவி காவல் ஆணையர் செல்போனில் சென்று தகவல் தெரிவிக்கவே, உடனே தியேட்டரில் இருந்து வெளியே வந்து மைக்கில் கமிஷனரை தொடர்பு கொண்டுள்ளார். தொடர்ந்து தச்சநல்லூர் பகுதியில் ஒரு பிரச்னை. அதனால் அங்கு நிற்கிறேன் என்று கூறி சமாளித்துள்ளார்.
ஆனால் உண்மை தெரிந்த கமிஷனர், “இரவு பணி பார்க்காமல் தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்த்து கொண்டிருக்கிறீர்கள். மாநகரில் இன்று இரவு பணியில் முழுவதுமாக பெண் இன்ஸ்பெக்டர்கள் இருக்கும் நிலையில், நீங்கள் எந்தவித பொறுப்பும் இன்றி இப்படி செயல்படுவது நியாயமா?” என திட்டியுள்ளார்.
இந்த உரையாடல்கள் அனைத்தும் ஓபன் மைக்கில் நடந்ததால் போலீசாரிடையே இந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.