1 வருடமாக மனநலம் குன்றிய கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - வெடிக்கும் விவகாரம்!
கல்லூரி மாணவி ஓராண்டாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பகீர் கிளப்பியுள்ளது.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை
சென்னை ஐனாவரத்தைச் சேர்ந்த லோடு வாகன ஓட்டுநரின் மகள்(21) சென்னையில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் பி.ஏ. படித்துவருகிறார். சற்று மனவளர்ச்சி குன்றிய அந்த மாணவி தினமும் கல்லூரிக்கு ஆட்டோவில் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், மாணவியின் போனுக்கு ஆபாச குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை பார்த்த தந்தை உடனடியாக இதுகுறித்து போலீஸில் புகாரளித்துள்ளார்.
தொடர்ந்து மாணவியிடம் விசாரித்ததில் தன்னை கல்லூரி வாசலில் இருந்து சிலர் வெளியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர்கள் தனது கல்லூரி தோழி மூலம் அறிமுகமானவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்தில் விசாரிக்கையில்,
வெடித்த விவகாரம்
தனது கல்லூரி தோழி மூலம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நரேஷ், சுரேஷ் மற்றும் சீனு ஆகிய மூன்று பேர் அறிமுகமானர். அவர்கள், யானைக்கவுனி, பெரியமேடு பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பல முறை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
மேலும், திருப்பூரைச் சேர்ந்த கவி, கோயம்பேட்டைச் சேர்ந்த ரோஷன், அம்பத்தூரைச் சேர்ந்த பாண்டி, திருத்தணியைச் சேர்ந்த மணி ஆகியோர் ஸ்னாப்சாட் மூலம் பழகி அவர்களும் என்னை தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில், திருத்தணியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சுரேஷ் மற்றும் 12-ம் வகுப்பு மாணவன் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக திமுக அரசை உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.